நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் முக்கிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூர்: 

நோன்பு பெருநாள் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களிலிருந்து திரும்பு பயனர்களைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது.

பெந்தோங்கிலிருந்து புக்கிட் திங்கி வரும் கோலாலம்பூர்-காரக் நெடுஞ்சாலையில் இன்று காலை 9.40 மணி முதல் வாகனங்கள் மெதுவாக நகர்கிறது என்று கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

கிமீ 67.8 முதல் கிமீ 63.2 வரை 4.6 கிலோமீட்டர்கள் (கிமீ) வரை மேற்கு நோக்கிய போக்குவரத்து மெதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெந்தோங்கிலிருந்து புக்கிட் திங்கி வரை செல்லும் சாலையின் கிமீ 58.1 முதல் கிமீ 49.2 வரை நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

விடுமுறை முடிந்து நகரங்களுக்குக் திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சாலைகளில் போக்குவரத்து மெதுவாக உள்ளது.

இதற்கிடையில், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் செபராங் ஜெயாவிலிருந்து பிராய், ஜூரு முதல் ஜூரு டோல் பிளாசா, தைப்பிங் உட்டாரா முதல் சாங்கட் ஜெரிங் வரை மற்றும் புக்கிட் கந்தாங் ஸ்டாப் முதல் புக்கிட் பெராபிட் வரை வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன என்று மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தாப்பாவிலிருந்து பிடோர் செல்லும் நெடுஞ்சாலையின் தெற்கு திசையின் 327.3   கிலோமீட்டரில் ஒரு விபத்து பதிவாகியுள்ளது.

இதனால் அப்பகுதியில் சாலைப் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாகவுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset