நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னர் தம்பதி வைசாகி, சித்திரை புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்

இஸ்தானா நெகாரா:

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர் தம் துணைவியார் ராஜா ஜரித் சோஃபியா நாட்டிலுள்ள அனைத்து சீக்கியர்களுக்கும் இந்தியர்களுக்கும் வைசாகி மற்றும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். 

தற்போது பொதுமக்களிடையே உள்ள சகிப்புத்தன்மையும் ஒருவருக்கொருவர் கொடுக்கும் மரியாதையும் நாட்டின் ஒற்றுமைக்கு முதுகெலும்பாக இருப்பதாகச் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பல்லின மக்களின் ஒற்றுமையே தனக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பரிசு என்றும் மாமன்னர் குறிப்பிட்டார். 

நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு மதம் அல்லது இனம் பாராமல் மக்களிடையே நல்லிணக்கமும் ஒற்றுமை உணர்வும் மிகவும் முக்கியமானது என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார்.

வைசாகி பெருநாளையும் சித்திரைப் புத்தாண்டையும் பொதுமக்கள் தங்களிடம் குடும்ப உறுப்பினர்களோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடும்படி பிரதமர் வலியுறுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset