நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் தேவாரப் போட்டி 2024

கோலாலம்பூ:

கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தினர்  தேவாரப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்தப் போட்டி வரும் ஏப்ரல் 27ஆம் தேதி காலை 9 மணி முதல் கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது என்று தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ நடராஜா கூறினார்.

டிஎஸ்கே குழுமத்தின் ஒருங்கிணைப்பில் இப் போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளது.

முதல் பிரிவு 7 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்டு நடைபெறும். 

இப் பிரிவில் வெற்றி பெறும் முதல் போட்டியாளருக்கு 700 ரிங்கிட் பரிசாக வழங்கப்படும்.

இரண்டாவது நிலை வெற்றியாளருக்கு 400 ரிங்கிட்டும் மூன்றாவது வெற்றியாளருக்கு 200 ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இரண்டாம் பிரிவு 16 வயதுக்கு மேற்பட்ட பிரிவாக நடத்தப்படவுள்ளது.

இப் பிரிவில் வெற்றி பெறும் முதல் போட்டியாளருக்கு 1,000 ரிங்கிட் பரிசாக வழங்கப்படும்.

இரண்டாவது நிலைக்கு 500 ரிங்கிட்டும் மூன்றாவது நிலைக்கு 300 ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இப் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வம் கொண்டவர்கள் வரும் ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

மேல்விவரங்களுக்கு 011-2150 6190 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று டான்ஶ்ரீ நடராஜா கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset