நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனது அழகு ராணி பட்டத்தை இழந்தார் விரு நிக்காஹ் டெரின்சிப்

கோலாலம்பூர்:

அரைகுறை ஆடை அணிந்த ஆண் நண்பர்களுடன் நடனமாடிய  விரு நிக்காஹ் டெரின்சிப் தனது அழகு ராணி பட்டத்தை இழந்துள்ளார்.

இவர் சமீபத்தில் நடந்த Unduk Ngadau Johor அழகு ராணிக்கான போட்டியில் வெற்றி வாகை சூடி சிறந்த அழகி பட்டம் பெற்றார்.

இந்த நிலையில் இவர் தாய்லாந்து நாட்டுக்கு விடுமுறையில் சுற்றுலா சென்ற இடத்தில் ஆண் நண்பர்களுடன் நடனமாடினார்.

அவர்கள் முகம் சுழிக்கும் வகையில் அரை குறை ஆடை அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான சமூக வலை தளங்களில் வீடியோ வைரலானது. 

அழகிக்கு எதிராக சர்ச்சை கருத்துகளும் பதிவிடப்பட்டன.

இதையடுத்து விரு நிக்காஹ் டெரின்சிப்பிடமிருந்து மலேசிய அழகு ராணி பட்டத்தைத் திரும்பப் பெறுவதாக நிகழ்ச்சி நடத்திய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

விரு நிக்காஹ் சாதாரண பெண்ணாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் அவர் அழகு ராணி பட்டம் வென்றவர்.

நடன நிகழ்ச்சியால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பாக கடாசான்டூசுன் கலாச்சார சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஜோசப் பைரீன் கிட்டிங்கன் தெரிவித்தார்

இதனை ஏற்று விரு நிக்காஹ் டெரின்சிப் தான் வாங்கிய அழகு ராணி பட்டத்தைத் திருப்பி அனுப்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset