நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேவையும் தீர்வும் என்ற கருப்பொருளுடன்  3ஆவது தமிழ்க் கல்வி தேசிய மாநாடு: இளஞ்செழியன்

பெட்டாலிங்ஜெயா:

மூன்றாவது  தமிழ்க் கல்வி தேசிய மாநாடு தேவையும் தீர்வும் என்ற கருப்பொருளுடன்  நடைபெறவுள்ளது.

தமிழ் அறவாரியத்தின் தலைவர் இளஞ்செழியன் இதனை தெரிவித்தார்.

மலேசியத் தமிழ் அறவாரியம் கடந்த 21 ஆண்டுகளாகத் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டிற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்க் கல்வி குறித்த மாநாட்டினை அறவாரியம் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

அவ்வகையில் மூன்றாவது மாநாடு வரும் நவம்பர் 24ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகத்தின் பெர்னாடா சிஸ்வாவில் நடைபெறவுள்ளது.

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், இடைநிலைப் பள்ளி தமிழ்மொழி ஆசிரியர்கள், படிவம் 6 தமிழ்மொழி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி, பல்கலைக்கழக மாணவர்கள், அரசு சாரா இயக்கங்கள், பொதுமக்கள் என பலர் இம்மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

கிட்டத்தட்ட 800 பேர் இம்மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளனர் என்று இளஞ்செழியன் கூறினார்.

மலேசிய தமிழ்மொழி விரிவுரையாளர் குழாம் ஆதரவில் மலேசிய தமிழ் அறவாரிம், மலேசியத் தலைமையாசிரியர் மன்றம், மலாயா தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கம், மலேசிய தமிழ்மொழிக் காப்பகம், இடைநிலைப்பள்ளி தமிழ்மொழி ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் கூட்டமைப்பில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

மலேசியாவில் தமிழ்க் கல்வியில் ஏற்படும் முக்கிய சவால், வாயுப்புகளை கண்டறிதல்.

தமிழ்க் கல்வியின் தர மேம்பாட்டிற்கான புதிய அணுகுமுறைகளை ஆராயதல். தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, அதை தக்கவைத்துக் கொள்வது. 

எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழி, தமிழ் இலக்கிய பாடமும் எடுப்பது. எஸ்டிபிஎம் தேர்வுத் தமிழ்ப்பாடமும் போதிப்பதில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வுகளை முன்மொழிதல்.

இடைநிலைப் பள்ளி மாணவர்களிடையே தமிழ் இலக்கிய பாடத்தை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களை கொண்டு இம்மாநாடு நடத்தப்படுகிறது.

ஆகவே இம்மாநாட்டில் அனைவரும் கலந்துக் கொள்வதுடன் தமிழ்க் கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மாநாட்டின் இணைத் தலைவர் குமரன் கோரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset