நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பயணிகள் ஏறி செல்ல ஆபத்தானவை: 42 பேருந்துகளுக்கு தடை

கோலாலம்பூர்:

ஆபத்தான தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மொத்தம் 42 பேருந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேபிஜே எனும் சாலைப் போக்குவரத்துத் துறையின் மூத்த இயக்குநர் லோக்மன் ஜமான் தெரிவித்தார்.

ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஓப்ஸ் ஹரி ராயா 2024 மூலம் வாகனப் பயன்பாட்டுத் தடை தனது தரப்பு விதித்ததாக அவர் கூறினார்.

54 பஸ் நிறுத்துமிடங்கள், 28 பஸ் நிலையங்களில் கிட்டத்தட்ட 3,799 பஸ்களில் சோதனை செய்யப்பட்டது.

அனைத்து பேருந்துகளும் பல்வேறு ஆபத்தான தொழில்நுட்பக் குற்றங்களைச் செய்ததால் சாலையில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

எனவே, இந்த நபர்கள் பயணிகளுக்கு சேவைகளை வழங்குவதில் இருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset