நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்து சமூகத்தினர் மேம்பாட்டிலும் அரசாங்கத்தின் கவனம் இருக்க வேண்டும்: ஹம்சா ஜைனுடின்

கோலாலம்பூர்:

நாட்டு மக்களின் நலன் காக்க அரசாங்கம் முனைப்பு காட்டவேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின்  வலியுறுத்தினார்

இன்று நாடு பொருளாதார சிக்கலிருந்து மீள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே சமயத்தில் பொருள் விலை ஏற்றத்தால் மக்கள் நிதி நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளனர்.

இதற்கும் தீர்வுக்காண ஆக்கப் பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று  தலைநகரில் தமது இல்லத்தில் நோன்பு துறப்பு நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இதனை வலியுறுத்தினார்.

டத்தோஸ்ரீ அன்வார்  மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாததால்  நடப்பு அரசாங்கத்தின மீது வைத்துள்ள நம்பிக்யை இழந்து வருகிறார்கள் .

நாளுக்கு நாள்  நாட்டில் நிதி நெருக்கடி தொடர்ந்து  மக்களுக்கு சுமையை அதிகரித்து வருகிறது கவலையை அளிப்பதாக  பெர்சத்து கட்சியின் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின்  கூறினார்.

தேசிய கூட்டணி தொடர்ந்து மக்களின் நம்பிக்கைக்கு சேவையாற்றும் கூட்டணியாக விளங்குகிறது.

மேலும் அதில் அங்கம் வகிக்கும் பெர்சத்து கட்சியில் இந்தியர்ரகள், சீனர்கள் இணையலாம் என்றும் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset