நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமூக ஊடகங்களில் தீங்கிழைக்கும் உள்ளடக்கங்கள் அதிகரிப்பு: எம்சிஎம்சி

பெட்டாலிங் ஜெயா: 

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் சமூக ஊடகங்களில் தீங்கிழைக்கும் உள்ளடக்கங்கள் குறித்து சுமார் 52,638 புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம்  தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு முழுவதும்  42,904 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தாண்டு அதன் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளது. 

மெட்டா, டிக் டோக் நிறுவனங்களுக்கும் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி பட்சிலுக்குமிடையிலான சந்திப்பில், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து தங்கள் கண்காணிப்பு முயற்சிகளை அதிகரிக்க இரண்டு சமூக ஊடக தளங்களின் நிறுவனங்களைக் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

மலேசிய சட்டங்களின் அடிப்படையில் இனம், மதம் மற்றும் ஆட்சியாளர் தொடர்பான உள்ளடக்கத்தை திறம்பட கையாள சமூக ஊடக தள வழங்குநர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த இரு செயலிகளும் ஒருங்கிணைந்த நம்பகத்தன்மையற்ற நடத்தை கொண்ட உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தவும், மோசடிகள் மற்றும் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டம் போன்ற தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை உடனடியாக கண்காணித்து செயல்படவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், மலேசியாவில் சமூக ஊடக தளங்களின் சட்டங்கள் மற்றும் இயக்க வழிகாட்டுதல்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்தும் இரு தளங்களுக்கும் தெரிவிக்கப்பட்டன. 

அனைவருக்கும் இணையத்தின் உற்பத்தி, இணக்கமான மற்றும் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதி செய்யும் அதே வேளையில், மலேசியர்களின் பேச்சு உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கும் மடாணி அரசாங்கத்தின் உறுதிப் பாட்டிற்கு இணங்கும் வகையில் இந்நடவடிக்கை அமைந்துள்ளது என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset