நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எதிர்க்கட்சிகளின் இனவாதம், மதம் விளையாட்டுகளில் விழுந்து விட வேண்டாம்: ஹன்னா இயோ அறிவுறுத்தல் 

கோலாலம்பூர்: 

எதிர்க்கட்சிகளின் இனவாதம், மதம் விளையாட்டுகளின் அறியாமையில் யாரும் விழுந்து விட வேண்டாம். இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ அறிவுறுத்தினார். 

மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த தகவலை வெளியிட்டார். பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்களின் போக்கும் செயல்களையும் ஹன்னா இயோ கடுமையாக விமர்சித்தார். 

அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளின் மாயவலைகளில் விழ வேண்டாம். முன்பொரு காலத்தில் நம்பிக்கை கூட்டணி எதிர்கட்சியாக இருந்த போது எந்தவொரு இனவாத சம்பவங்களும் அரங்கேறவில்லை என்று அவர் குறிப்பிட்டார். 

நடப்பு மடானி அரசாங்கம் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இனவாதத்தை இந்நாட்டில் யாரும் விரும்பமாட்டார்கள் என்று அவர் சொன்னார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset