நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஆர் நியூ ஸ்டார் கால்பந்து அணியின் விருது விழா

ஜொகூர் பாரு:

ஜொகூர் பாருவிலுள்ள எம்ஆர் நியூ ஸ்டார் கால்பந்து அணியின் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இந்த அணியில் சிறந்த முறையில் தங்களின் ஆற்றலை வெளிப்படுத்தி வரும் மாணவர்களுகளைக் கௌரவிக்கும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக அதன் பயிற்சியாளர் ரமேஷ் ராமசாமி கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த 15 வயதுக்கு கீழ் உள்ள பிரிவில்  அர்வின், சந்தோஷ், சக்தீஸ்வரன்,  ஹெஷ்வின், சந்தோஷ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

மேலும் கடந்த பருவம் முதல் அதிக கோல்களை அடித்த 10 வயதுக்கு கீழ் உள்ள பிரிவில் கவினேஷுக்கும் விருது வழங்கப்பட்டது.

அதோடு, இவ்வணியிலிருந்து ஜேடிதி பெண்கள் அணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 12 வயதுக்குட்பட்ட 3 மாணவர்களான  தர்ஷிக்கா ஸ்ரீ,  தனுசியா, தீப்தி ஆகியோருடன் இவ்வணியிலிருந்து மலேசியக் கால்பந்து அணிக்குத் தேர்வாகியிருக்கும்  சமிஷ்காவுக்கும் விருது வழங்கப்பட்டது.

இந்த விருது விழாவில் பொற்றோர்களும் கலந்து கொண்டதோடு மாணவர்களுக்கு அவர்களே பரிசுகளை எடுத்து வழங்கினர்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset