நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கலைச் சுவர், தரை அமைப்பு தொழில் துறையில் கால்பதித்திருக்கும் முதல் மலேசியர் 

ஈப்போ:

நாட்டில் கலைச் சுவர்,  தரை அமைப்பு தொழில் துறையில்  ஈடுபட்டுள்ள முதல் மலேசியர் தனது சேவை தொடங்கியுள்ளார்.

இந்த துறையை அமெரிக்காவில் உள்ள  நிறுவனம் ஒன்றில் பயிற்சியைப் பெற்று நமது நாட்டில்  அந்த துறையை அறிமுகப்படுத்தி வருகிறார்  பேரா, ஈப்போவைச் சேர்ந்த ஜேம்ஸ் அன்பானந்தன்.

இந்த துறையில் பயிற்சியை மேற்கொள்வதின் வழி கை நிறையை  சம்பாதிக்கவும்  வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

ஈப்போ தாமான் ரிஷா பெர்மையில் தமது நிறுவனத்தை தொடங்கி பல இளைஞர்களுக்கு பயிற்ச்சியையும் வழங்கி  வருகிறார்.

அண்மையில் மித்ராவின் ஆதரவோடு இந்த துறையில்  பயிற்சியை நிறைவு செய்த 20  இளைஞர்களுக்கு  நற்சான்றிழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு சிறப்பு வருகை புரிந்த பேரா மாநில அரசு ஆட்சிக் குழு உறுகினரும், மாநில இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான அ. சிவநேசன் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு நற்சான்றிதழ் எடுத்து வழங்கினார்.

இதில் உரையாற்றிய சிவநேசன், மலேசியாவில் இந்த துறையை தொடங்கியுள Artistic concrete system Malaysia, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜேம்ஸ் அன்பானந்தனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த பயற்சியை அமெரிக்காவில். திறன்பட கற்று  அதற்கான முறையான சான்றிதழைக்கொண்டு சிறந்த  நமது  இளைஞர்களுக்கு பயிற்சியை வழங்க ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியை அளிப்பதாக சிவநேசன் தெரிவித்தார்.

நாட்டில் இந்த துறை குறித்து பலர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த துறையை திவேட் பயிற்ச்சி திட்டத்தில் இணையை முயற்சிகள் மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset