நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவில் மண்டிப் சிங்  வேட்பளரா?: சிலாங்கூர் மடானி அரசுக்கு பாதகத்தை ஏற்படுத்தலாம்

உலுசிலாங்கூர்:

கோல குபு பாருவில் மண்டிப் சிங்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அது சிலாங்கூர் மடானி அரசுக்கு பாதகத்தை ஏற்படுத்தலாம் என தகவல்கல் வெளியாகியுள்ளது.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கடந்த மார்ச் மாதம் காலமானதை தொடர்ந்து இடைத்தேர்தல் வேட்பாளர் நியமனங்களும் தேர்தல் பிரச்சாரங்களும் கோலகுபுபாருவில் சூடு பிடித்துள்ளது. 

இந்நிலையில் கோலகுபுபாருவில் வேட்பாளராக அமைச்சர் கோபிந்த் சிங்கின் செயலாளர் மண்டிப் சிங், செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ஏலிஸ், உலுசிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் எலின் சரிப்பா, உட்பட இன்னும் சிலரின் பெயர்கள் வழுத்து வருகிறது. 

இது சிலாங்கூர் மாநில அரசு சார்ந்த தேர்தலாக இருப்பினும் மத்திய அரசாங்கத்தின் குளருப்படிகளும் இந்தியர் எதிர்நோக்கிய ஏமாற்றங்களும் இதில் பிரதிபலிப்பாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

மத்திய அரசாங்கத்தில் இந்தியர்களை பிரதிநிதிக்க தமிழ் சார்ந்த அமைச்சர் இல்லாத நிலையை பெரும் ஏமாற்றமாக இந்திய சமுதாயம் பார்க்கும் இந்நேரத்தில் அமைச்சர் கோபிந்த் சிங்கின் செயலாளர் மண்டிப் சிங்கின் பெயர் கோலகுபுபாரு வேட்பாளர் பதவிக்கு முதலிடத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. 

கடந்தப் பொதுத் தேர்தல் நேரத்திலும் மண்டிப் சிங்கின் பெயர் முன்மொழியப் பட்டிருந்தாலும் அவருக்கு அந்த இடம் கிடைக்கப் பெறவில்லை என்றதும் பொதுத் தேர்தல் சமயத்தில் நேரத்தில் அவரது தலைமை கோலகுபுபாருவில் காணவில்லை என்ற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை. 

மண்டிப் சிங் வேட்பாளர் என்பது சாத்தியமானால் இந்தியர்கள் வாக்குகள் பெருமளவில் இழக்க நேரிடலாம்.

மேலும் கோல குபு பாருவை மடானி சிலாங்கூர் அரசாங்கம் இந்த தொகுதியை இழப்பது உறுதி என்பதை உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பேச்சாக உள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset