நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசாவின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டது 

கோலாலம்பூர்: 

முன்னாள் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் முடக்கப்பட்டது. இந்த தகவலை சிவராசா உறுதிப்படுத்தினார். 

கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி முதல் தமது முகநூலில் ஆபாசமான வீடியோக்கள் இடம்பெற்றிருப்பதைக் கண்டு அமலாக்க தரப்பான மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. 

முகநூல் பதிவுகளோ காணொளிகளோ பதிவேற்றம் செய்யப்பட்டது தொடர்பில் அவர் இந்த விளக்கத்தை அளித்தார். 

இவ்வேளையில் இந்த சிக்கலுக்குத் தீர்வு கிடைக்க பணியாற்றிய மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையத்திற்கும் மெட்டா நிறுவனம் ஆர்.சிவராசா தமது நன்ற்யைத் தெரிவித்துக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset