நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துப்பாக்கிகளை வைத்திருந்த கணவன் மனைவி தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்துள்ளனர்

கோலாலம்பூர்: 

இஸ்ரேலிய ஆடவருக்குத் துப்பாக்கியை வாங்கி விற்பனை செய்ததாகச் சந்தேகிப்படும் கணவன்- மனைவி தம்பதி கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

ஒரு மொழிபெயர்ப்பாளரால் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டபோது புரிந்துகொண்டு தலையசைத்த இருவரும், இப்போது நீதிபதி ஷரிபா ஹசிண்டி சையத் ஓமர் முன் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

குற்றப்பத்திரிகையின்படி, குற்றம் சாட்டப்பட்ட ஷரிஃபா ஃபராஹா CZ 75 P-01 CAL.9 LUGER பிஸ்டல் வகை துப்பாக்கியைச் சட்டவிரோதமாக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. 

இரண்டாவது குற்றவாளியான அவரது கணவர் அப்துல் அசிம் முஹம்மத் யாசின் மார்ச் 29-ஆம் தேதி இரவு 8 மணியளவில் முகவரி தன் மனைவி சட்டவிரோதமான துப்பாக்கியை வைத்திருந்ததற்கு துணையாகச் செயல்பட்டுள்ளார். 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 6 முறை பிரம்படி அனுபவிக்க நேரிடும்.

மேலும், இந்தத் தம்பதிக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

இந்த வழக்கை ஜூன் 11-ஆம் தேதி மீண்டும் குறிப்பிடுவதற்கு நீதிமன்றம் தேதி நிர்ணயித்துள்ளது.

அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஏப்ரல் 11-ஆம் தேதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset