நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்து திருமண பயிற்சிகள் அர்த்தமானது: டத்தோஶ்ரீ சரவணன்

அம்பாங்:

இந்து திருமண பயிற்சிகள் அர்த்தமானது என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

மலேசிய இந்து சங்கமும் மலேசிய ஆதி சங்கரர் திருமடமும் இணைந்து இந்து திருமண ஆயத்த பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியுள்ளன.

இந்த பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

இதுபோன்ற பயிற்சிகள் மிகவும் அர்த்தமானதாகும். குறிப்பாக நம் சமுதாய மக்களுக்கு தேவையான ஒன்றாகும்.

திருமணத்திற்கு முன் இதுபோன்ற பயிற்சிகளின் கலந்து கொள்வதால் தம்பதியனிரிடையே புரிந்துணர்வு ஏற்படும்.

அதேவேளையில் திருமணத்திற்கு பின் விவாகரத்துகளை தவிர்க்க முடியும்.

ஆகவே இப்பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

முன்னதாக திருமண ஆயத்த பயிற்சியை நிறைவு செய்து வைத்த டத்தோஶ்ரீ சரவணன் சான்றிதழ்களை எடுத்து வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மலேசிய இந்து சங்கத் தலைவர் தங்க கணேசன், ஶ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தின் ஸ்தாபகர் சுவாமி மகேந்திர குருக்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset