நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமரின் தொலைநோக்கு இலக்கை அடைவதற்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை: டத்தோ ரமணன்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் தொலைநோக்கு  நோக்கத்தை அடைவதற்கான முயற்சிகளுக்கு ஏற்ப பொருளாதாரத்தை தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

இதில் தாம் உறுதியாக உள்ளதாக தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சகத்தில்  100 நாட்கள் பணியில் இருந்த பிறகு, 

அமைச்சர் டத்தோ எவோன் பெனடிக்கின் முழு தலைமைத்துவத்தின் கீழ் பல விவகாரங்களின் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக மக்கள், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது அதில் முதன்மை இலக்காகும். 

மேலும் இந்த நியமனத்தை அங்கீகாரமாகவும் மக்களின் நம்பிக்கையாக நான் பார்க்கிறேன்.

இது ஒரு பெரிய பொறுப்பாகும், இது அரசியல் நிலைத்தன்மை, பொருளாதாரம், ஒருமைப்பாடு, நேர்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

100 நாட்கள் அமைச்சில் அறிவைப் பெற பல்வேறு அனுபவங்களையும் படிப்பினைகளையும் வழங்கியுள்ளது.

இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களுடனும் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் துறையை மேம்படுத்துவதற்கான சிறந்த தளமாக இந்தப் பொறுப்பு அமைந்துள்ளது.

முதலீட்டு வாய்ப்புகளை வழங்குதல், பயிற்சி, வணிக நிர்வாகத்தில் ஆதரவு உள்ளிட்ட ஒவ்வொரு நடவடிக்கையும் தொழில்முனைவோர் சமூகத்திற்கு உண்மையான பலன்களை வழங்குவதை இது உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset