நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் வசதி குறைந்த மக்களுக்கு  பெருநாள் உதவிகள்  வழங்கப்பட்டது 

ஈப்போ:

ஈப்போவில் வசதி குறைந்த மக்களுக்கு நோன்பு  பெருநாள் உதவிகள்  வழங்கப்பட்டது.

ஈப்போ அரசு சாரா இயக்கங்கள், டி.எஸ். நகைக் கடையினர் இணைந்து ஈப்போ ஜாலான் எஸ்.பி.யில் உள்ள சூராவ்வில்  அதரவற்ற  சிறார்கள், உடல்  ஊனமுற்றவர்கள், வசதி குறைந்த மக்களுக்கு இந்த உதவிகளை வழங்கினர்.

பேரா இந்தியர் கால்பந்து சங்கத் தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில்  தலைமையில் இந்த நிகழ்வு  நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வசதி குறைந்த முஸ்லிம் மக்களுக்கு மட்டும் உதவிகள் வழங்கவில்லை மாறாக இந்து, கிறிஸ்துவ, சீன சமுகத்தைச் சேர்ந்த வசதி குறைந்த மக்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டது.

பல இனம் சமுகத்தினர்கள் வாழும் இந்த நாட்டில் சமுக ஒற்றுமை வலுபெறவேண்டும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அங்காங்கே நடத்தப்படவேண்டும் என்று டத்தோ அமாலுடின் இஸ்மாயில் கூறினார்.

பல உலக நாடுகளில்  ஒரே இன சமயதமவர்கள் வாழும் மக்களிடையே பல்லவேறு சர்ச்சைகள் நிகழ்வதைக் காண  முடிகிறது.

மலேசியாவில் சமுக ஒற்றுமை மேலும் வலுப்படுத்த  அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

ஆகவே மக்கள் அனைவரும் ஒற்றுமையும் தொடரத்து வாழ இறைவனை பிராரத்திப்பதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வில் அரசு சாரா இயக்கங்களைச் சேர்ந்த டாக்டர் அமிட் ஷா, முகமட் நிக்மத்துல்லா, மகாதீர் சுலைமான் மற்றும் முகமட் சுலைமான் ஆகியோர் கலத்துக் கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset