நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு தனித்தனி கட்டண முகப்பிடம்: கால்டெக்ஸ் விசாரிக்கும் 

ஜார்ஜ்டவுன்:

பினாங்கில்  முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையே பணம் செலுத்தும் முகப்பிடங்கள் பிரிக்கப்பட்டது தொடர்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என்று கால்டெக்ஸ் பெட்ரோல் நிலையத்தை நடத்தும் செவ்ரான் மலேசியா கூறியது.

சம்பந்தப்பட்ட கன்வீனியன்ஸ் ஸ்டோரை இயக்கும் ஃபேமிலிமார்ட் என்ற வணிகத் தளம் சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை செவ்ரான் கடுமையாக கருதுகிறது.

குற்றச்சாட்டுகளை விசாரிக்க சம்பந்தப்பட்ட வணிகத் தளத்துடன் நெருக்கமாக செயல்படும்.

இனங்களுக்கிடையிலான இடைவெளியை அதிகரிப்பதாகக் கூறப்படும் பிரிவினைச் செயலை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றர்.

இந்த சம்பவம் புக்கிட் மெர்தாஜாமில் உள்ள கடையில் நடந்ததை தொடர்ந்து அது தொடர்பான வீடியோ கிளிப் சமூக வலைத் தலங்களில் வைரலானது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset