நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை D'Sara கல்வி அமைப்பு உருவாக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

தாப்பா:

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை D'Sara கல்வி அமைப்பு உருவாக்க வேண்டும்.

தப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

கடந்த 2021 ஆண்டில் டி சாரா (D'Sara-Dermasiswa Anak Parlimen Tapah)  என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு ,   தனது சொந்த பணத்தை இத்திட்டத்திற்கு டத்தோஸ்ரீ  சரவணன் வழங்கி வருகிறார்.

ஏழ்மை நிலை, மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒரு போதும் தடையாகி விடக் கூடாது என்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பின் வாயிலாக தாப்பாவில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டு வருகிறது. இது ஆண்டு தோறும் தொடரும் என்று டத்தோஸ்ரீ கூறினார்.

அவ்வகையில் இன்று 100 மாணவர்களுக்கு இந்த கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு பிரேத்தியேக கல்வி பயிற்சி பட்டறைகளும், பல்கலைக்கழக சுற்றுலாக்கள் நடத்தப்பட வேண்டும் என்று, D'Sara பொறுப்பாளர்களை டத்தோஸ்ரீ கேட்டுக் கொண்டார்.

கல்வி பயிலும் மாணவர்களுக்கு பணப் பிரச்சினை ஒரு சுமையாக இருக்கக் கூடாது.

இதன் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டது.

வரும் காலங்களில் இன்னும் அதிகமான மாணவர்களுக்கு இந்த உதவுகள் வழங்கப்படும்  என்று டத்தோ சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset