நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு பெருநாள் காலத்தில் உணவுப் பொருட்கள் போதுமான அளவிலுள்ளது: மாட் சாபு

பெட்டாலிங் ஜெயா: 

அடுத்த வாரம் கொண்டாடப்படும் ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு நாட்டின் போதுமான அளவு உணவு மற்றும் மூலப்பொருட்கள் இருப்பதை விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்யும்.  

பொதுமக்கள் உணவு மற்றும் மூலப்பொருட்களின் இருப்பை நினைத்துக் கவலை கொள்ள வேண்டாம் என்றும் தனது அமைச்சகம் தொடர்ந்து நிலைமையை கண்காணிக்கும் என்றும் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் மாட் சாபு தெரிவித்தார்.  

ஹரி ராயா பெருநாள் கொண்டாட்டம் முழுவதும் இறைச்சி, கோழி மற்றும் காய்கறிகள் போதுமான அளவிற்கு இருப்பதை அமைச்சகம் உறுதி செய்யும் என்று அவர் கூறினார். 

ஹரி ராயா பெருநாளுக்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் பொதுமக்கள் எந்தப் பிரச்சனையையும் சந்திக்க நேராது. காரணம், அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை உறுதி செய்ய அமைச்சகம் ஆரம்பக் கட்ட நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருவதையும் அமைச்சர் மாட் சாபு குறிப்பிட்டார். 

10% முதல் 30% வரையிலான விலைக் குறைப்புகளை வழங்கும் 113 இடங்களில் உள்ள ஷாவால் அக்ரோ மடானியின் சந்தை விற்பனையில் பொருட்களையும் ஃபாமா உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

அங்கு ஒரு கிலோ கோழி இறைச்சி 10 வெள்ளிக்கு விற்கப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset