நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்கு பிரதமர் திடீர் வருகை 

கோலாலம்பூர்: 

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்கு தான் மேற்கொண்ட திடீர் வருகை குறித்த காணொலியைப் பகிர்ந்துள்ளார். 

கடந்த வாரம், பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு 1 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான செலவில், மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் டெண்டர் செயல்முறை மற்றும் திட்டத்திற்கான நிதியுதவிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

விமான நிலையத்தின் நிர்வாகம் மற்றும் வசதிகள், அத்துடன் அங்குப் பணிப்புரியும் ஊழியர்கள் குறிப்பாக சுங்கத் துறை மற்றும் குடிநுழைவு துறை அதிகாரிகளைச் சந்திப்பதற்காக தாம் அங்குச் சென்றதாகப் பிரதமர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அனைத்து நிலையிலான ஊழியர்களும் ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

நாட்டிற்கு பில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்பை ஏற்படுத்த கூடிய மோசடிகளைத் தவிர்க்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். 

கடந்த செவ்வாய்கிழமை உள்நாட்டு வருமான வரி வாரியம், குடிநுழைவுத் துறை உள்ளிட்ட அனைத்து அமலாக்க முகவர்களும் தவறு, ஊழல் மற்றும் மோசடிகளைத் தவிர்க்குமாறு பிரதமர் எச்சரித்தார்.

பிரச்சினையில் தலையிடாமல் இருக்க சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் தனது தரப்பு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவர் வலியுறுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset