நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது

கோலாலம்பூர்: 

ஹரி ராயா பெருநாள் கொண்டாடுவதற்காக பலர் சொந்த ஊர்களுக்குப் பயணத்தை மேற்கொள்வதையடுத்து இன்று காலை 9 மணி முதல் கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரையை நோக்கிச் செல்லும் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

கோலாலம்பூர்-காரக் நெடுஞ்சாலையில் கோம்பாக்கிலிருந்து கெந்திங் செம்ப்பா வரையிலான போக்குவரத்து நெரிசலானது கோம்பாக்கிலிருந்து கெந்திங் செம்ப்பா வரை கோம்பாக் டோலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். 

சிலிம் ரிவரிலிருந்து சுங்காய், மெனோரா சுரங்கப்பாதையில் இருந்து சுங்கை பேராக் ஆர்என்ஆர் வரையிலான வடக்கு நோக்கிய நெடுஞ்சாலைகளிலும் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன. 

பிடோரிலிருந்து தப்பா நோக்கி செல்லும் வடக்கு திசையில் போக்குவரத்து நெரிசல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இன்று காலை 7.43 மணியளவில் தாப்பாவிலிருந்து கோபேங் வரை வடக்கு திசையில் கி.மீ 314.7-இல் வாகனங்கள் சீராக செல்லத் தொடங்கியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset