நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

Syed Bistro Group குழும இயக்குனர் டத்தோ ஹாஜி செய்யது கமால் மறைவு 

பெட்டாலிங் ஜெயா:

செய்யது உணவகக் குழுமத்தின் (Syed Bistro Group) இயக்குனர்களில் ஒருவரான டத்தோ ஹாஜி செய்யது கமால் இன்று அதிகாலை  மறைந்தார். 

டத்தோ ஹாஜி செய்யது கமால் நாட்டின் முன்னணி கேட்டரிங் நிறுவனமான செய்யது கேட்டரிங்கை திறம்பட நிர்வகித்து வந்தார். அனைவருடனும் இன்முகத்துடன் பேசும் பண்பு கொண்டவரான அவர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள முஸ்லிம் முன்னேற்ற சங்கத்தின் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றி வந்தார்.

மிம் காய்ன், பெரஸ்மா போன்ற இயக்கங்களிலும் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். 

டத்தோ ஹாஜி செய்யது கமால் மறைவுச் செய்தியை அவரது மூத்த சகோதரர் டத்தோ ஹாஜி ஜமருல் கான் உறுதிப்படுத்தினார்.  

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset