நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பின் போது கார் விபத்து; காணொலியை வெளியிட்ட லைகா நிறுவனம் 

சென்னை: 

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்குமார் செலுத்திய கார் விபத்துக்குள்ளானது. 

படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தெரிவித்தது. இந்த காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சம்பந்தப்பட்ட இந்த காணொளி கடந்த நவம்பர் மாதத்தில் எடுக்கப்பட்டதாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். இயகுநர் மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்தார். 

விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர்கள் திரிஷா, ஆரவ், அர்ஜூன் சர்ஜா, மற்றும் பலர் நடிக்கின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset