நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருநாள் காலத்தில் சிலாங்கூரில் 382 ஜேபிஜே அதிகாரிகள் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர்

பெட்டாலிங் ஜெயா: 

ஏப்ரல் 1 முதல் 20 வரை மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கையில் போக்குவரத்து விதிகளைக் கண்காணிக்கவும், சாலை பயனர்கள் விதிகளை கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் சிலாங்கூர் சாலைப் போக்குவரத்துத் துறை ஜேபிஜே) மொத்தம் 382 அதிகாரிகளைப் பணியமர்த்தியுள்ளனர். 

சாலைப் பயனாளிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கான சுமூகமான பயணத்தை உறுதிசெய்யவும், பொதுப் போக்குவரத்துச் சேவைகளின் பாதுகாப்பான இயக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கவும் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாகவும் சிலாங்கூர் ஜேபிஜே இயக்குநர் அஸ்ரின் போர்ஹா கூறினார். 

இந்த நடவடிக்கையின் போது, சிலாங்கூர் ஜேபிஜே முக்கிய சாலைகளிலும் அதிக சாலை விபத்துகள் நிகழும் இடங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். 

வேக வரம்பை மீறுதல், சமிஞ்சை விளக்கை மீறி செல்லுதல், வாகனம் ஓட்டும்போது கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்துதல், அவசரப் பாதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட ஒன்பது பெரிய குற்றங்களுக்கு கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நடவடிக்கையில், பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக டிப்போவில் பேருந்துகளின் தொழில்நுட்ப ஆய்வுகளையும் மேற்கொள்ளப்படும்.

இதற்கிடையில், சாலை மறியலின் போது, 497 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டதாகவும் இதன் விளைவாக பல்வேறு குற்றங்களுக்காக 340 சம்மன்கள் அனுப்பப்பட்டதாகவும் அஸ்ரின் கூறினார்.

மேலும், வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஏழு அறிவிப்புகள், ஆய்வு உத்தரவுகளின் 8 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும், 40 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset