நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கணக்கியலாளர் பாலியல் பலாத்காரம்: சீனக் கோவில் காவலர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை

கங்கார்: 

மார்ச் 29-ஆம் தேதி அன்று ஆராவ் சீனக் கோவில் பெண் கணக்கியலாளரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் சீனக் கோவில் காவலர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார். 

குற்றம் சாட்டப்பட்டவர், ஓங் போ சன் நீதிபதி முஷிரி பீட் முன் சீன மொழியில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு அதனைப் புரிந்துகொண்டு குற்றத்தை மறுத்துள்ளார். 

குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், மார்ச் 29-ஆம் தேதி அன்று பிற்பகல் 3 மணியளவில் ஆராவ் செங் ஓங் சீனக் கோவிலில் 27 வயது பெண்ணைக் கற்பழித்ததாக ஓங் போ சன் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனைச் சட்டத்தின் 376(1) பிரிவின்படி குற்றம் செய்திருப்பது கண்டறியப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம்.

குற்றஞ்சாட்டவர்  தரப்பில் ஹனானி சே நோர் தேசிய சட்ட உதவி அறக்கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தியபோது, ​​அரசு துணை வழக்கறிஞர் அலியா சுசிலா செக் பை வழக்கில் முன்னிலையானார். 

இந்தக் குற்றத்தைக் கருத்தில் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக 8,000 வெள்ளி ஜாமீன் வழங்குமாறு அலியா நீதிமன்றத்தில் கோரினார்.

இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு உடல்நலக் கோளாருகள் இருப்பதோடு உடல்நலப் பிரச்சனைகள் உள்ள அவரது மனைவியையும் கவனித்துக்கொள்வதைக் கருத்தில் கொண்டு போதுமான ஜாமீனை பரிசீலிக்குமாறு நீதிமன்றத்தை ஹனானி கேட்டுக் கொண்டார்.

நீதிமன்றம் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக ஒரு உத்தரவாதத்துடன் 6,000 வெள்ளி ஜாமீன் விதித்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கை மீண்டும் குறிப்பிடும் தேதி வரை அருகிலுள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். 

இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு வரும் மே 6ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset