நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ரா வளர்ப்புப் பிள்ளை போல் நடத்தப்படுகிறது: சார்லஸ் சாடல்

கோலாலம்பூர்:

மித்ரா தொடர்பான அரசாங்கத்தின் வெளிப்படையான உறுதியற்ற தன்மையை ஜசெகவின் சார்லஸ் சந்தியாகோ விமர்சித்தார்.

குறிப்பாக மித்ரா ஒரு வளர்ப்புப் பிள்ளை போல் நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

2018 முதல் மித்ராவை பிரதமர் துறையிலிருந்து தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கும் பின் மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டு வருகிறது.

இது வளர்ப்புப் பிள்ளையாக இருக்கும் மித்ராவை யாரும் உரிமையாக்க விரும்புவது இல்லை.

இதுபோன்ற நடவடிக்கைகள் சோர்வையும் மலேசிய இந்திய சமூகத்தை அவமதிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

மேலும் நிறைய மக்கள் இப்படி முன்னும் பின்னுமாக நம்பிக்கை இழக்கிறார்கள்.

இது இந்திய சமூகத்தில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்மைக்கு வழிவகுக்கிறது என்று அவர் கூறினார்.

இந்த இடமாற்றங்கள் மித்ராவின் செயல்பாடுகளை பாதிக்கும்.

அதன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் நேரத்தில், அது மிகவும் தாமதமாகிவிடும்.

பி40 வருமானப் பிரிவில் உள்ள இந்தியர்களை மாற்றியமைத்து மேம்படுத்துவதே மித்ராவின் ஆரம்ப நோக்கம்.

மலேசிய இந்திய புளூபிரிண்ட் கையில் உள்ள சிக்கல்களையும் அவற்றைத் தீர்ப்பதற்கான உத்திகளையும் தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்று சார்லஸ் சந்தியாகோ கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset