நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்காவ் மோசடியில் 150,000 ரிங்கிட் இழப்பை மே பேங்க் பணியாளர் தடுத்துள்ளார்

கோலாலம்பூர்:

மக்காவ் மோசடியில் 150,000 ரிங்கிட் இழப்பை மே பேங்க் பணியாளர் தடுத்துள்ளார்.

இதனை அவ்வங்கி வெளியிட்ட ஓர் அறிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியது.

பினாங்கு கம்போங் பாருவில் உள்ள மே பேங்க் கிளையின் பணியாளர் சமீபத்தில் 57 வயதான அரசு ஊழியர் ஒருவர் மக்காவ் மோசடியில் இழப்பதைத் தடுத்திருக்கிறார்.

ஃபாத்திமா என்ற அரசாங்க ஒப்பந்தத் தொழிலாளிக்கு வங்கிப் பிரதிநிதியாகக் கூறி ஒரு நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அவரது கணக்கு மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறி வருவதாகவும் மலாயன் பேங்க் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

அவரை மேலும் சிக்க வைக்க போலீஸ்படை, பேங்க் நெகாரா  உட்பட பல்வேறு அமலாக்க மற்றும் ஒழுங்குமுறை ஏஜென்சிகளின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொண்டு பேசினர்.

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு அழைப்பில், பினாங்கில் உள்ள மே பேங்க் கம்போங் பாரு கிளையில் தனது சேமிப்புக் கணக்கிலிருந்து 150,000 ரிங்கிட்டை எடுக்குமாறு மோசடி செய்பவர்களால் ஃபாத்திமாவுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இருந்தாலும் வங்கி பணியாளரின் நடவடிக்கையால் ஃபாத்திமாவின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.

இதன் மூலம் ஃபாத்திமாவின் பணம் பாதுகாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset