நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர் ரோபர்ட் குவோக்

கோலாலம்பூர்:

ஹோட்டல், சொத்துடமை  நிறுவனர் ரோபர்ட் குயோக் ஃபோர்ப்ஸ் 2024 பில்லியனர் பட்டியலில் 176ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

நிகர மதிப்பு 11.4 பில்லியன் டாலருடன் 
100 வயதான அவர் மலேசியாவின் மிகப் பெரிய  பணக்காரராக விளங்குகிறார்.

அவரை அடுத்து ஹோங் லியோங் வங்கி நிறுவனர் கியூக் லெங் சான் 8.8 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 287ஆவது இடத்தில் உள்ளார்.

தொழிலதிபர் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் 4.9 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 624ஆவது இடத்தில் உள்ளார்.

கடந்த 12 மாதங்களில் ஹாங்காங்கை தளமாகக் கொண்ட குவோக் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்து பணக்காரர்கள் பட்டியலில் வீழ்ந்ததாக ஃபோர்ப்ஸ் தரவுகள் காட்டுகிறது.

அவரது இழப்பு பல கிழக்கு ஆசிய கோடீஸ்வரர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

அவர்களும் பொதுவாக வீழ்ச்சியடைந்துள்ளனர்.

முன்பை விட இப்போது அதிக பில்லியனர்கள் உள்ளனர். மொத்தம் 2,781 பேர் உள்ளனர்.

கடந்த ஆண்டை விட  26 பேர் அதிகம் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset