செய்திகள் மலேசியா
பிரதமர் துறையின் கீழ் மீண்டும் மித்ரா: ஃபஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு
புத்ராஜெயா:
மித்ரா எனப்படும் மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு மீண்டும் பிரதமர் துறையின் கீழ் மாற்ற அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் இதனை தெரிவித்தார்.
இது பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஏரோன் அகோ டகாங் ஆகியோரால் கூட்டாக முடிவு செய்யப்பட்டது என்றார்.
மித்ரா கடந்த டிசம்பரில் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பரில், மித்ரா மீண்டும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்படுவார் என்று அன்வார் அறிவித்தார்.
இருப்பினும் அவர் சிறப்புப் பிரிவு தொடர்ந்து கண்காணிக்கப்படும் அவர் கூறினார்.
மித்ராவின் நிர்வாகத்தை பொறுப்பேற்ற பிறகு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு பின்னடைவை சந்தித்தது.
மித்ராவின் நோக்கம் தெரியவில்லை என்று அமைச்சர் கூறியதை அடுத்து ஏரோனை பதவி விலகுமாறு மூன்று இந்திய குழுக்கள் அழைப்பு விடுத்தன.
அதே வேளையில் மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் மாற்றப்பட வேன்டும் என பல தரப்பினர் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2026, 11:51 pm
நான் கட்சியை விட்டு வெளியேறினால், அது கெஅடிலானுக்கு தான் ஆபத்தாக முடியும்: ரபிசி
April 4, 2026, 11:50 pm
விபத்தில் மரணமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்: சரஸ்வதி
April 4, 2026, 11:47 pm
மதுபோதை, போதைப்பொருள் துஷ்பிரயோகம் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது: கணபதி ராவ்
April 4, 2026, 3:15 pm
சிந்தனைத் திறனைச் சிதைக்கும் சாட் ஜீபிடி : 2025 எஸ்.பி.எம் தேர்வில் மலாய் மொழி சரிவு
April 4, 2026, 1:41 pm
உணவுப் பொருட்களின் சரக்கு போதுமானதாக உள்ளது; விலை உயராது: அமைச்சர்
April 4, 2026, 1:40 pm
