நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி அபாரம்

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

சுல்தான் அப்துல் அஸிஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அபா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 8-0 என்ற கோல் கணக்கில் அபா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல்களை அடித்த்தார்.

அப்துல் அஸிஸ் இரு கோல்களை அடித்த வேளையில் சாடியோ மனே, அப்துல் மஜித்,  அப்துல் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு கோல்களை அடித்தனர்.

மற்ற ஆட்டங்களில் அல் ஹிலால், அல் வேஹ்டா, அல் தாவோன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset