நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் மாநாடு: பிரதமர் சிறப்பு வருகை

கோலாலம்பூர்:

மலேசியாவில் நடைபெறும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் மாநாட்டிற்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு வருகை புரியவுள்ளார்.

இதனை மலேசிய டாக்டர் அம்பேத்கர் நற்பணி இயக்கத்தின் தலைவர் டத்தோ பஞ்சமூர்த்தி உறுதிப்படுத்தினார்.

மலேசிய டாக்டர் அம்பேத்கர் நற்பணி இயக்கம் அனைத்துலக டாக்டர் அம்பேத்கர் மாநாட்டையும் அவர்தம் 133ஆம் பிறந்தநாள் விழாவையும் ஏற்பாடு செய்துள்ளது.

இம்மாநாடு வரும் ஏப்ரல் 14, 15ஆம் தேதிகளில் ஷாஆலம் ஐடிசிசி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

டாக்டர் அம்பேத்கரின் சிறப்பம்சங்கள் குறித்தும் அவரின் தொண்டுகளைக் குறித்து அனைத்துலக அளவில் பல்வேறு அறிஞர்கள் ஆய்வுக் கட்டுரைகளைப் படைக்கவிருப்பதால் பெரும் பயனான மாநாடாக இம் மாநாடு திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் ஆலோசகர்களாக இம் மாநாட்டை வழிநடத்துகின்றனர்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், டாக்டர் அம்பேத்கரின் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் சிறப்பு வருகையாளராகப் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளார்.

ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 3 மணிக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மாநாட்டில் பங்கேற்று சிறப்பிப்பார்.

டாக்டர் அம்பேத்கரின் வாரிசான பீம்ராவ் அம்பேத்கர் இம்மாநாட்டில் பங்கேற்பதாக மாநாட்டுத் தலைவர் டத்தோ பஞ்சமூர்த்தி தெரிவித்தார்.

அனைத்துலக ரீதியில் இருந்து 300க்கும் மேலான பேராளர்களும் மலேசியாவில் 250க்கும் மேலான பேராளர்களும் இதுவரையில் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆகவே  இம்மாநாட்டில் அனைத்து மலேசிய இந்திய இயக்கங்களுக்கும் அரசியல் தலைவர்களும் பங்கேற்று சிறப்பிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset