நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலிய ஆடவர் விவகாரத்தில் தம்பதியர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை: ஐஜிபி

கோலாலம்பூர்:

இஸ்ரேலிய ஆடவர் விவகாரத்தில் தம்பதியர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மரணத் தண்டனையை சந்திக்க நேரிடும்.

தேசிய போலீஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார்.

ஷாலோம் அவிட்டன் என்றழைக்கப்படும் இஸ்ரேலிய ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அவருக்கு துப்பாக்கிகளை வழங்கியதாக உள்ளூர் தம்பதியினர் மீது சந்தேகிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட தம்பதியர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

1971 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சட்டத்தின் 7ஆவது பிரிவின்படி, அவர்களுக்கு எதிரான விசாரணை அறிக்கை திறக்கப்பட்டதாக  அவர் கூறினார்.

முன்னதாக ஷாலோம் மார்ச் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

​​அவர் இஸ்ரேலிய குடிமகனாக, பிரான்ஸ் நாட்டுக் கடப்பிதழை பயன்படுத்தி இந்த நாட்டிற்குள் நுழைந்துள்ளார்.

கடப்பிதழ் சட்டம் 1966ன் படி விசாரணை நடத்தப்பட்டது. மேலும் துப்பாக்கிகளை வைத்திருந்தது கடுமையாக குற்றம்.

42, 40 வயதுடைய தம்பதியினருக்கும் இது பொருந்தும் என்று டான்ஶ்ரீ  ரஸாருடின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset