நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிரபல காமெடி நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்; திரையுலகினர் சோகம் 

சென்னை: 

தமிழ்ச்சினிமாவில் சில திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஸ்வேஷ்வர ராவ். 

பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் உன்னை நினைத்து, பிதாமகன் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமான இவர்  உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். 

நடிகர் விஸ்வேஷ்வர ராவ் சுமார் 350 திரைப்படங்களுக்கும் மேல் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில்  நடித்துள்ளார். 62 வயதாகும் நடிகர் விஸ்வேஷ்வர ராவின் இறுதி சடங்கு நடைபெறும் என்று அவரின் குடும்ப உறுப்பினர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை சிறுசேரியில் உள்ள அவருடைய வீட்டில் பிரேதம் வைக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset