நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிற்கல்லூரி மாணவர் கொலை: 13 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு 

லாஹாட் டத்து: 

கடந்த மாதம் லாஹாட்  டத்து தொழிற்கல்லூரியில் 17 வயது மாணவனைக் கொன்றதன் தொடர்பில் பதின்மூன்று இளைஞர்கள் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

16 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவரும் மார்ச் 21-ஆம் தேதி இரவு 9 மணி முதல் மார்ச் 22-ஆம் தேதி காலை 7.38 மணி வரை லாஹாட் டத்து தொழிற்கல்லூரியின் தங்குமிட அறையில் முஹம்மத் நஸ்மி அய்சாட் முஹம்மத் நாருல் அஸ்வானைக் கூட்டாகக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின்படி அனைவரது மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இக்குற்றம் நிருப்பிக்கப்பட்டால் அதே குறியீட்டின் 34-வது பிரிவின்படி மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது 12-க்கும் குறைவான பிரம்படிகள் வழங்கப்படும்.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட கொலை வழக்கின் காரணமாக மாஜிஸ்திரேட் நூர் அசிரஃப் சோல்ஹானியின் முன் நடந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரிடமிருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

இது சிறார் உட்படுத்திய வழக்கு என்பதால் காலை 9 மணிக்கு தொடங்கிய வழக்கு விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் மட்டுமே நீதிமன்றத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ங் ஜூன் தாவ் முன்னிலையானார். 

குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் சார்பில் அமிருல் அமீன் ரஷித் மற்றும் கமருடின் முகமது சின்கி ஆகியோர் ஆஜராகினர்.

மீதமுள்ள 11 குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.

ரசாயன அறிக்கை மற்றும் பிரேதப் பரிசோதனைக்காக காத்திருக்கும் வேளையில், வழக்கை மீண்டும் குறிப்பிட மே 16-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset