நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்தாயிரம் வெள்ளி ஊதியம் பெறுபவர் பி40 குழுவைச் சேர்ந்தவரா? அன்வார் சாடல்

புத்ராஜெயா: 

மானியங்கள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களை இலக்கு வைப்பது உள்ளிட்ட தேசிய கொள்கைகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை மறுத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் அன்வார் இப்ராஹிம் சாடினார்.

அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து எப்போதும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைகளை முன் வைக்கின்றனர். 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடுகள் கிடைக்காததால் அவர்கள் இன்னும் பி40 குழுவைச் சேர்ந்தவர்களாக இருப்பதாக கூறுவதைப் பிரதமர் சாடியுள்ளார். 

கூடுதல் மானியத்துடன் பத்தாயிரம் ரிங்கிட் சம்பளம் பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு பி40 குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியும் என்று 
நிதியமைச்சகத்தின் மாதாந்திர கூட்டத்தில் அன்வார் கேள்வி எழுப்பியுள்ளார்.   

கடந்த மார்ச் 5 ஆம் தேதி, மக்களவையில், கோலா கிராய் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் லத்தீஃப் அப்துல் ரஹ்மான், எதிர்க்கட்சி பிரதிநிதிகளை ஒதுக்கும் உரிமையை மறுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பி40 குழுவைச் சேர்ந்த எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இருப்பதாகக் கூறினார்.

உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவித்தொகையை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset