நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிநுழைவு துறை, உள்நாட்டு வருமான வரி வாரியம் ஆகியவை கண்காணிக்கப்படுகின்றன: பிரதமர் அன்வார் எச்சரிக்கை 

கோலாலம்பூர்: 

சுங்கத்துறை அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கையின் எதிரொலியாக நாட்டின் குடிநுழைவு துறையும் உள்நாட்டு வருமான வரி வாரியமும் கண்காணிப்பில் உள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

அந்த இரு துறைக்ளையும் அரசாங்கம் முழு வீச்சில் கண்காணித்து வருகிறது. அலட்சியத்தைக் களையும் பொருட்டு இந்த நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்தார் 

கே.எல்.ஐ.ஏவில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கைகள் தம்மை பெரிதும் வேதனைப்படுத்தியுள்ளது. அத்துடன் நாட்டிற்கும் பில்லியன் கணக்கில் இழப்பு ஏற்பட்டிருப்பதை அரசாங்கம் கடுமையாக கருதுவதாக அன்வார் குறிப்பிட்ட்டார். 

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சுங்கத்துறை அதிகாரிகள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இதனால் மலேசியாவிற்கு சுமார் 2 பில்லியன் ரிங்கிட் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset