நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதன்மை மானியங்கள் 85% மக்களை இலக்காகக் கொண்டுள்ளது: பிரதமர்

பாடாங் பெசார்:

நாட்டில் முதன்மை மானியங்கள் 80 முதல் 85 சதவீத மக்களை இலக்காகக் கொண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மானியங்கள்  உண்மையிலேயே தேவைப்படும் மக்கள் அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக மானிய இலக்கை செயல்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் கொண்டுள்ளது.

இந்த மானியங்களின் பலன்களை பணக்காரர்களும் சுமார் 3.5 மில்லியன் வெளிநாட்டினர் அனுபவிப்பதைத் தடுப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

பெட்ரோலுக்கான மானியம் யாருக்கு தருகிறோம். இப்போது அது யாருக்கு லாபம்? 

மலேசியாவில் 3.5 மில்லியன் அல்லது கிட்டத்தட்ட நான்கு மில்லியன் வெளிநாட்டினர் பெட்ரோல் மானியங்களைப் பெறுகின்றனர்.

காரணம் அரசு அனைவருக்கும் மானியங்களை வழங்குகிறது.

நம் நாட்டில் உள்ள பணக்காரர்கள்கூட பெட்ரோல்  மானியங்களைப் பெறுகின்றனர்.

எனவே, மானிய இலக்குகள் என்று அழைக்கப்படுவதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அரசு அடையாளம் காணும்.

இதனால் மானியங்களின் பலன்கள் நேரடியாக 80% முதல் 85% மக்களுக்கு சென்றடையும்.

பெர்லிஸ் ஃபெல்டா சுப்பிங்கில் நடைபெற்ற நோன்பு திறப்பு விழாவில் பேசிய பிரதமர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset