நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூகத்தை பிரதமர் ஓரங்கட்டியதாக கூறுபவர்கள் தஞ்சோங் ரம்புத்தான் செல்ல வேண்டும்: டத்தோ ரமணன்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒருபோதும் இந்திய சமூகத்தை ஓரங்கட்டியதில்லை.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் இதனை கூறினார்.

பிரதமர் இந்திய சமுதாயத்தை ஓரங்கட்டுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது.

இந்த குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. மாறாக இந்திய சமூகத்திற்கு அவர் கூடுதலான உதவிகளை தான் செய்கிறார்.

ஸ்பூமி கோ பிக் திட்டத்திற்காக 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமானா இக்தியாரின் பெண் திடத்திற்காக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட இந்திய பெண்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் ஏழ்மையை ஒழிக்கும் திட்டங்களில் இந்திய சமுதாயமும் பயன் பெறுகின்றனர்.

ஆகவே இந்திய சமூகத்தை பிரதமர் ஓரங்கட்டியுள்ளார் என்ற குற்றச்சாட்டுகளை அனைவரும் நிறுத்த வேண்டும்.

பிரதமர் இந்திய சமூகத்தை ஓரங்கட்டிவிட்டார் என்று கூறுபவர்கள் தஞ்சோங் ரம்புத்தானுக்குச் சென்று தங்களின் உடல், மன நிலையை சரிபார்க்க வேண்டும்.

இவை அனைத்தும் பொறாமை, சுயநலத்தால் நடக்கிறது.

இதனால் இந்திய சமூகத்தின் கோபத்தைத் தூண்டும் நோக்கத்தில் உள்ளன. அதை நிறுத்துங்கள் என்று டத்தோ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset