நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுயதொழில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் 10 லட்சம் தொழிலாளர்கள்: மனிதவள அமைச்சு இலக்கு 

புத்ராஜெயா:

கிக் பொருளாதாரத்தில் ஈடுப்பட்டிருக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு சுயதொழில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை  அறிமுகப்படுத்துவதை விரைவுபடுத்துங்கள்.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கேட்டுக் கொண்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  2024 பட்ஜெட்டில் சாதாரண தொழிலாளர்கள், சுயதொழில் செய்யும் தொழிலாளர்களுக்கான சுயதொழில் சமூக காப்பீட்டுத் திட்டத்திற்கு மானியமாக  100 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளார்.

சுயதொழில் செய்யும் தொழிலாளர்கள் முதலில் வருடத்திற்கு 232.80 ரிங்கிட் செலுத்த வேண்டும்.

ஆனால் இந்த திட்டத்தின் கீழ், அவர்கள் வருடத்திற்கு  23.30 ரிங்கிட் மட்டுமே செலுத்த வேண்டும்.

மீதமுள்ள தொகையை அரசாங்கம் ஏற்கும். வருடத்திற்கு  23.30 ரிங்கிட் என்பது  ஒரு நாளைக்கு 6 சென் மட்டுமே.

பணம் செலுத்துபவர்கள் மருத்துவம், தற்காலிக ஊனமுற்றோர், நிரந்தர ஊனமுற்றோர் உட்பட பல பலன்கள் போன்ற 8 நன்மைகளை அனுபவிக்க முடியும். 

இந்த ஆண்டு மார்ச் நடுப்பகுதியில், போக்குவரத்து அமைச்சு மற்றும் மனித வள அமைச்சகம் இணைந்து மலேசியா முழுவதும் சுமார் 50,000 டாக்ஸி, பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு 100% இலவச சுயதொழில் சமூக காப்பீட்டுத் திட்டத்தை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset