நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில்  ஜாஸ்மின் லூவின் சாட்சியம் உள்ளது: ஷாபி

கோலாலம்பூர்:

1 எம்டிபி வழக்கில் அரசுத் தரப்பின் முக்கிய சாட்சியான ஜாஸ்மின் லூ தனது சொந்த நலனுக்காக சாட்சியங்களை அளித்துள்ளார்.

டத்தோஶ்ரீ நஜீப்பின் வழக்கறிஞரான டான்ஶ்ரீ ஷாபி அப்துல்லா இதனை கூறினார்.

1எம்டிபியின் முன்னாள் சட்ட ஆலோசகரான லூ, 

பல ஆண்டுகள் தப்பி ஓடிய பின் கடந்த ஆண்டு மலேசியாவுக்குத் திரும்பினார்.

மேலும் அவர் குற்றச்சாட்டுகளை மறுத்து, 1 எம்டிபி தொடர்பான வாய்மொழி அறிக்கைகளை மட்டுமே கொடுத்துள்ளார் என்றார்.

இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நஜிப்பிற்கு எதிரான 2.27 பில்லியன் ரிங்கிட் 1 எம்டிபி  ஊழல் வழக்கு விசாரணையின் போது ஷாபிக்கும் லூவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

2010இல் முராபஹா நிதி ஒப்பந்தம் என அழைக்கப்படும் 1 எம்டிபியின்  நடவடிக்கை தொடர்பான ஆதாரங்கள் தொடர்பாக ஷாஃபி லூவிடம் குறுக்கு விசாரணை செய்தார்.

இதனால் அந்நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை  இழக்க நேரிட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset