நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்மொழிப் பள்ளிகள் பிரச்சினையில் தேசியக் கூட்டணியின்  நிலைப்பாட்டை கூற  மொஹைதினுக்கு சவால்

கோல குபு பாரு:

தாய்மொழிப் பள்ளிகள் பிரச்சினையில் தேசியக் கூட்டணியின்  நிலைப்பாட்டை கூற அதன் தலைவர் டான்ஶ்ரீ மொஹைதினுக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.

ஜசெக கட்சியின் உதவித் தலைவர் திரேசா கோக் இந்த சவாலை விடுத்துள்ளார்.

கோல குபு பாரு இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளராக பாங் சாக் தாவோவின் கல்விப் பின்னணி குறித்து பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபாட்லி ஷாரி கேள்வி எழுப்பியது தொடர்பில் திரேசா கோக் இவ்வாறு கூறினார்.

பெர்சத்து, தேசியக் கூட்டணி ஆகியவை தாய்மொழிக் கல்விக்கு எதிரானவை அல்ல.

அதை ஒழிப்பதற்கான எந்த முயற்சியையும் ஆதரிக்காது என்றும் அறிவிக்க டான்ஶ்ரீ மொஹைதினுக்கு துணிவிருக்கிறதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset