நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேவைப்பட்டால் பாடு தரவு தளம் மீண்டும் திறக்கப்படலாம்: ரபிசி ரம்லி

பெட்டாலிங் ஜெயா:

தேவை இருப்பின் பாடு எனப்படும் முதன்மை தரவு தளத்தில் பதிவு செய்ய மீண்டும் திறக்கப்படும் சாத்தியம் இருப்பதாகப் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி தெரிவித்தார்.  

மார்ச் மாதம் 31-ஆம் தேதியோடு பாடு முதன்மை தளத்தில் பதிவு செய்யும் இறுதி நாளாகும். 

இந்நிலையில், இம்மாதமும் மானியம் மறுமதிப்பீடு திட்டத்தைத் தனது அமைச்சகம் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கும் என்று அவர் தெரிவித்தார். 

இந்த விவகாரம் தொடர்பான எந்த அறிவிப்பும் எதிர்காலத்தில் அரசால் அறிவிக்கப்படும் என அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு திறந்திருந்த பாடு தரவு தளத்தில்  17.65 மில்லியன் மக்கள் பதிவு செய்துள்ளதாக ரபிசி கூறினார்.

18 வயதுக்கு மேற்பட்ட 11.55 மில்லியன் மக்கள் பாடு தளத்தில் தங்கள் தனிப்பட்ட சுயவிவரங்களை வெற்றிகரமாகப் பதிவுசெய்து புதுப்பித்துள்ளனர்.

18 வயதுக்குட்பட்ட குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொத்த நபர்களின் சுயவிவரங்களில் 17.65 மில்லியன் வெற்றிகரமாக புதுப்பிக்கப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset