நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்று அனாக் சயா; இன்று நமக்கெல்லாம் காயாவா? ஸம்ரி வினோத் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏன்?: இந்து சங்கம் கேள்வி

புத்ராஜெயா:

ஸம்ரி வினோத் விவகாரத்தில் பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்.

அன்று அனாக் சயா இன்று நமக்கெல்லாம் காயாவா என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் கேள்வி எழுப்பினார்.

சிவராத்திரியைப் பண்டிகைக்கு பின் இந்து சமய அன்பர்களையும் சிவலிங்கத்தையும் சிறுமைப்படுத்தும் விதமாக, ஸம்ரி வினோத் வெளியிட்ட கருத்திற்கு நாடு முழுவதும் உள்ள இந்து சமயத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸம்ரி வினோத் இந்து சமயத்தை அவமதிப்பது இது முதல் முறை அல்ல. 

இது தொடர்பில் அவர் மீது ஆயிரக்கணக்கான போலீஸ் புகார் செய்யப்பட்டது. வழக்கும் தொடரப்பட்டது.

ஆனால் ஸம்ரி வினோத் மீது இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் அவர் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் சசி முயற்சியில்  இன்று தேசிய சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் மகஜர் ஒன்று வழங்கப்பட்டது.

ஸம்ரி மீது நடுநிலையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் இதன் முக்கிய நோக்கமாகும்.

May be an image of 7 people, banner and text

குறிப்பாக இந்த நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட வேண்டும் என்று தங்க கணேசன் கூறினார்.

ஸம்ரி வினோத் உட்பட இந்து சமய விவாகரங்களில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏன் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார் என்று எங்களுக்கு புரியவில்லை.

ஒரு காலகட்டத்தில் எல்லாம் பிள்ளைகளும் அனாக் சாயா என்று கூறினார்.

இன்று நமக்கெல்லாம் காயா என்ற நிலையாகி விட்டது.

ஆகவே பிரதமர் இந்த விவகாரத்தில் மௌனம் களைய வேண்டும் என ஒட்டுமொத்த இந்துக்களும் எதிர்பார்க்கின்றனர் என்று தங்க கணேசன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset