நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறந்தது இந்தியா கேட்

கோலாலம்பூர்:

உணவகத் துறையில் தனி முத்திரை பதித்து வரும் இந்தியா கேட் நிர்வாகம் தமது 8-ஆவது கிளையைச் செந்தூல் வட்டாரத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறந்தது. 

இந்த எட்டாவது கிளையை மஇகாவின் உதவி தலைவர் டத்தோ டி.மோகனும் இந்தியா கேட் உணவகத்தின் உரிமையாளரின் தாயார் அமிர்தவள்ளியும் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தனர் 

இந்தியா கேட் உணவகத்தில் சமைத்து வழங்கப்படும் உணவுகள் யாவும் சுவை மாறாமல் தரமாக மக்களுக்குப் பரிமாறப்படுவதாகவும் டத்தோ டி.மோகன் தனது சிறப்புரையில் தெரிவித்தார். 

மேலும், உணவக வர்த்தகத்தை முறையாக எவ்வாறு கையாள்வது என்பதை தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பதால்தான் இந்தியா கேட் நிர்வாகம் இன்று தமது 8-ஆவது கிளையைத் திறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், புதிய கிளையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த பொதுமக்களுக்குத் தம்முடைய மனமார்ந்த நன்றியினை இந்தியா கேட் குழுமத்தின் தலைவர் சரவணன் சுப்பிரமணியம் தெரிவித்தார். 

மக்களின் ஆதரவு தங்களின் வளர்ச்சிக்கு முதன்மை காரணமாக இருப்பதாகவும் அவர்களின் உண்மையான கருத்துகளைக் கருத்தில் கொண்டு உணவின் சுவைக்கும் முக்கியத்துவம் வழங்குவதையும் அவர் உறுதிப்படுத்தினார். 

செந்தூல் மட்டுமின்றி. ஜாலான் ஈப்போ, செலாயாங், பத்துகேவ்ஸ், சிகாம்புட், கெப்போங் ஆகிய பகுதிகளுக்கு மத்தியில் இந்த இந்தியா கேட் உணவகம் அமைந்திருப்பதால், வாடிக்கையாளர்களைப் பெரும் அளவில் ஈர்க்குமென்ற நம்பிக்கை தமக்கு இருப்பதையும் அவர் குறிப்பிட்டார். 

இந்தியா கேட் உணவக அடையாளத்தில் உச்சமாக இந்த செந்தூல் கிளை அமைக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக 140 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவருந்தக்கூடிய வசதிகளும் இந்த உணவகம் செயல்படவுள்ளது.

திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று 1500 பேருக்கு இலவசமாகப் பிரியாணி வழங்கப்பட்டதும்  குறிப்பிடத்தக்கது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset