நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

167 இந்திய தனியார் பாலர்பள்ளிகளுக்கு மித்ரா முழுமையான ஆதரவு வழங்கும்: பிரபாகரன் பரமேஸ்வரன்

ஈப்போ: 

மித்ரா மானியத்தை எவ்வாறு மனு செய்வது, இதர விதிமுறைகள் குறித்து பேராக் மாநில செயலக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில்  விளக்கமளிக்கப்பட்டது. இதன் வாயிலாக அக்டோபர் 15 தொடங்கி நவம்பர் 14 க்குள் விண்ணப்பம் செய்யும்படி மித்ரா செயற்குழு தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் கூறினார்.

கடந்தாண்டில் 72 நாடாளுமன்ற தொகுதிகளில் அதாவது அதிகமான இந்தியர்கள் உள்ள தொகுதிகளுக்கு மானியத்தை மித்ரா வழங்கியது. அந்த மானியங்கள் அத் தொகுதிகளில் வசிக்கும் பி40 இந்தியர்களின் தேவையை பூர்த்தி செய்யப்பட்டது. ஆனால், இவ்வாண்டு அத்திட்டத்திற்கு பிரதமர் அனுமதி வழங்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது இந்நாட்டிலுள்ள 167 இந்திய பாலர்பள்ளிகளுக்கு மித்ரா நேரடியாக உதவிகள் வழங்கி வருகின்றது. இந்த பாலர்பள்ளிகளில் இந்திய மாணவர்கள் படிப்பதோடு மட்டுமன்றி அம் மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. தமிழ்ப்பள்ளிகளில் செயல்படும் பாலர்பள்ளிக்கு அரசாங்கம் உதவி வருவதால், மித்ராவின் உதவி தனியார் தமிழ் பாலர்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி அரசாங்க ஏஜென்சிகள் வாயிலாக இந்திய மக்களுக்கு உதவிகள் வழங்க திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பி40 இந்தியர்கள் உரிமம் ( லைசன்ஸ்) இலவசமாக எடுக்க போக்குவரத்து இலாகாவிற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், லாரி உரிமம் இலவசமாக பெறுவதற்கும் இத்திட்டம் உதவுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இம்மாதிரியான உதவும் நடவடிக்கைகள் திட்டத்திற்கு சமூகநல, மனிதவள இலாகாவிற்கு மானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் மனு செய்த ஒரு வாரத்திற்குள் நிதியுதவி கிடைத்துவிடும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

எந்தவொரு ஆலயத்திற்கும் மித்ரா நிதியுதவி வழங்கப்படமாட்டாது. ஆனால், அந்த ஆலயத்திலுள்ள மண்டபத்தின் சீரமைப்பு பணிகளுக்கு உதவிகள் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் மித்ரா நிர்வாகத்தை சீரமைக்கும் பொருட்டு மாநில செயற்குழு நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பேராக் மாநில மித்ரா ஒருங்கிணைப்பாளராக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துள்சி மனோகரன் நியமனம் செய்யப்பட்டதாகவும் உறுதி கடிதம் வழங்கப்பட்டதாக ப.பிரபாகரன் கூறினார்.

இச்சந்திப்பில், பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துள்சி மனோகரன், இயக்கங்களின் பேராளர்கள் கலந்துகொண்டனர்.

- ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset