நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் வழங்கப் போகும் சிறந்த சேவை தான் மக்கோத்தா மக்கள் கொடுக்கும் ஆதரவுக்கான எனது நன்றி: சைட் ஹுசைன்

குளுவாங்:

சிறந்த சேவையைத்தான் மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நான் வழங்குவேன். அவர்கள் கொடுக்கும் ஆதரவுக்கான எனது நன்றியே நான் அவர்களுக்கு தரப் போகும் சேவை ஆகும்.

இத்தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளர் சைட் ஹுசைன் இதனை கூறினார்.

மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் நான் போட்டியிடுகிறேன்.

வேட்புமனு தாக்கலை தொடர்ந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறேன். தொகுதியில் உள்ள மக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன்.

அவர்கள் அனைவரும் எனக்கு முழு ஆதரவு வழங்கி வருகின்றனர். அவர்களின் ஆதரவால் மலைத்து போயுள்ளேன்.

மக்களின் ஆதரவுக்கு வெறும் வார்த்தையால் நன்றி சொல்லி முடித்துவிட மாட்டேன். எனது சிறந்த சேவை தான் அவர்களுக்கான நன்றி. இதுதான் எனது முதன்மையான வாக்குறுதி.

மக்கோத்தா சட்டமன்ற தொகுதி இந்திய மக்களுடனான மாபெரும் ஒற்றுமை விழாவில் பேசிய வேட்பாளர் சைட் ஹுசைன் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset