நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு மாநில ஜசெக தேர்தலில் ராம்கர்பால் முதலிடம்: ஸ்டீவன் சிம் மாநிலத்தின் புதிய தலைவர்

செபராங் பிறை:

பினாங்கு மாநில ஜசெகவின் புதிய தலைவராக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தேர்வு செய்யப்பட்டார்.

அதே வேளையில் நிதி துணையமைச்சர் லிம் ஹுய் இங் தலைமைச்  செயலாளர் பொறுப்பை மீண்டும் தற்காத்தார்.

பினாங்கு மாநில ஜசெக தேர்தல் இன்று நடைபெற்றது. 15 இடங்களுக்கு மொத்தம் 31 பேர் போட்டியிட்டனர்.

இதில் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் 1,247 வாக்குகளை பெற்று முதல் இடத்தை பிடித்தார்.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் 1,237 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இயோ சூன் இன், ஷைரில் கிர் ஜொஹாரி, டேனியல் கோய், லாய் ஹோக் பெங், ஜேசன் ஹோங், ஜோஸ்வா வோ, ஃபீ ஷீன், லியூ சிம் கிம், சோம் லிப் ஷீ, லிம் ஹுய் இங், ஃபீ போன் ஷீ, தே லாய் ஹெங், ஆர்எஸ்என் ராயர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதில் அமைச்சர் ஸ்டீவன் சிம் மாநிலத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset