நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வானுடன் மூத்த போலீஸ் அதிகாரிகளை தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது: ஐஜிபி

கோலாலம்பூர்:

குளோபல் இக்வானுடன் மூத்த போலீஸ் அதிகாரிகளை தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.

குளோபல் இக்வான் ஹோல்டிங்ஸ் நடவடிக்கைகளை பாதுகாப்பிற்கான முயற்சிகளில் மூத்த போலீஸ் அதிகாரிகளை தொடர்புபடுத்துகின்றனர்.

இக் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது. தீங்கிழைக்கும் முயற்சியாகும்.

போலி கணக்குகள் மூலம் பொறுப்பற்ற தரப்பினரால் போலிஸ் படைக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டுள்ளது.

இந்த அவதூறை பரப்புபவர்கள் ஒரு போலி கணக்கு உருவாக்கப்பட்டு அதிலிருந்து இந்த வதந்திகளைப் பரப்புகின்றனர்  என்பதை நாங்கள் அறிவோம்.

மேலும் குளோபல் இக்வானுடன் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset