நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தின் உரிமையையும் மரியாதையையும் தேசிய முன்னணியால் மட்டுமே காக்க முடியும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

குளுவாங்:

நாட்டில் இந்திய சமுதாயத்தின் உரிமையையும் மரியாதையையும் தேசிய முன்னணியால் மட்டுமே காக்க முடியும்.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.

பதவியும் பட்டமும் இல்லாமல் நாம் வாழ்ந்து விடலாம். சுய மரியாதை இல்லாமல் வாழ முடியாது என்பது மஇகாவின் கொள்கையாகும்.

இதன் அடிப்படையில் தான் மஇகா சொந்த காலில் நிற்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இத் தொகுதியில் கிட்டத்தட்ட 5,000த்திற்கும் மேற்ப்பட்ட இந்திய வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த வாக்காளர்கள் அனைவரும் தேசிய முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.

நிதி கிடைக்கிறது. ஆலயத்திற்கு நிலம் கிடைக்கிறது. தமிழ்ப்பள்ளி இடம் மாற்றப்படுகிறது என்பதற்காக நான் இதை கூறவில்லை.

இந்த நாட்டில் இந்திய சமுதாயத்தின் உரிமையையும் மரியாதையையும் தேசிய முன்னணியால் மட்டுமே காக்க முடியும்.

அதற்கு மத்தியிலும் மாநிலத்திலும் தேசிய முன்னணி ஆட்சியில் இருக்க வேண்டும்.

அதே வேளையில் உங்களின் வாக்கு ஜொகூரில் மட்டும் அல்ல. மத்தியிலும் எதிரொலிக்கும்.

ஆகவே இதை அனைவரும் புரிந்து வரும் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் சைட் ஹுசைனுக்கு இங்குள்ள மக்கள் வாக்களிக்க வேண்டும்.

மக்கோத்தா சட்டமன்ற தொகுதி இந்திய மக்களுடனான மாபெரும் ஒற்றுமை விழாவில் பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset